மனிதர்கள் தான் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொள்வார்கள் என்ற நிலையில் தென்கொரியாவில் அரசு ரோபோ ஒன்று திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளது. இதற்கான காரணத்தை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தபோது தற்கொலை செய்து கொள்ளும் முன் அந்த ரோபோ இங்கும் அங்கும் நடந்ததாகவும் டென்ஷனாக இருந்ததாகவும் சிசிடிவி கேமரா மூலம் தெரிய வந்துள்ளது.
தற்கொலைக்கான காரணம் துல்லியமாக தெரியவில்லை என்றாலும் ரோபோ அதிக பணியின் காரணமாக சோர்ந்து போய் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தினசரி அதிகாரிகளுக்கு ஆவணங்களை வழங்குவது, உள்ளூர்வாசிகளுக்கு உதவுவது உட்பட பல முக்கிய பணிகளை இந்த ரோபோ பல மணி நேரமாக தொடர்ச்சியாக செய்து கொண்டிருந்த நிலையில் தான் திடீரென தற்கொலை செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.