மத்தியப் பிரதேசத்தின் போபாலில், தனது தாயுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டதால், நண்பனை இளைஞன் ஒருவர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய குற்றவாளியான ரஞ்சித், உயிரிழந்த ஆஷிஷ் தனது தாயுடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகித்துள்ளார். தன் வீட்டிற்கு அருகில் வரக்கூடாது என்று ரஞ்சித் பலமுறை எச்சரித்துள்ளார். ஆனால் ஆஷிஷ் மீண்டும் சந்தித்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் ரஞ்சித், தனது நண்பர்களான நிகில் மற்றும் வினய் ஆகியோருடன் சேர்ந்து ஆஷிஷை தாக்கியுள்ளார். கழுத்தை அறுத்து, தலையில் கல்லால் தாக்கியதில் ஆஷிஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சந்தேகம் வருவதற்கு முன் ரஞ்சித்தும் ஆஷிஷும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர் என்பது சோகமான முரண்பாடு. இந்த கொலை தொடர்பாக மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது.