ஜூலை 19ல் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு..!

Senthil Velan
புதன், 17 ஜூலை 2024 (16:49 IST)
வங்கக்கடல் பகுதிகளில் வரும் ஜூலை 19ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஜூலை 19ம் தேதி உருவாக வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது.
 
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நீலகிரி மற்றும் கோவையில் இன்றும் (ஜூலை 17), நாளையும் (ஜூலை 18) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சென்னையில் அடுத்த 48மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

ALSO READ: ரூ.133 மோமோஸ் டெலிவரி செய்யாத சோமேட்டோ-வுக்கு ரூ.60000 அபராதம்..!!
 
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்