அணில் ஏன் அங்கிள்னு கத்துது.. ஜங்கிள்னுதானே கத்தணும்! - சீமான் கலாய்!

Prasanth K

புதன், 27 ஆகஸ்ட் 2025 (13:15 IST)

திருச்சியில் நாம் தமிழர் கட்சி மாநாடு நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார் சீமான். 

 

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. நாளுக்கு நாள் பல்வேறு பகுதிகளிலும் கட்சி மாநாடு களைகட்டி வருகிறது. சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு மதுரையில் நடந்தது. அதில் ஏற்பாடுகள் மற்றும் தொண்டர்களின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

 

இந்நிலையில் பிப்ரவரி 7ம் தேதி திருச்சியில் மாநாடு நடத்த உள்ளதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “பிப்ரவரி 7ல் திருச்சியில் மாநாடு நடத்துகிறேன். அப்போது வரும் கூட்டத்தை பாருங்கள். மாநாடு எப்படி நடத்த வேண்டும். மாநாட்டில் எப்படி உரையாற்ற வேண்டும். எத்தனை லட்சம் பேர் கூடுகிறார்கள் என்பதை திருச்சி மாநாட்டில் பாருங்கள்,

சிஎம் சார் எப்போது சிஎம் அங்கிள் ஆனார்? அணில் ஏன் அங்கிள் அங்கிள் என கத்த வேண்டும். ஜங்கிள் ஜங்கிள் என்றுதானே கத்த வேண்டும்” என பேசியுள்ளார்.

 

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளை குறிப்பிட்டே சீமான் பேசியுள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்