நேற்று நடந்த மதுரை மாநாட்டில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசியது குறித்து முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் விமர்சித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு நேற்று மதுரையில் நடைபெற்றது. சுமார் லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்திருந்த மாநாடு 2 மணி நேரங்களிலேயே நடத்தி முடிக்கப்பட்டது. அதனால் விஜய் வழக்கம்போல பிற கட்சிகளை விமர்சித்து பேசிவிட்டு நகர்ந்தார். ஆனால் மதுரை மாநாட்டில் அண்ணா, எம்ஜிஆர் அடையாளங்களை விஜய் தன்னுடன் இணைத்துக் கொள்ளும் விதத்தில் செயல்பட்டது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விமர்சித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் “தமிழ்நாட்டை காக்க வந்த அவதார புருஷனாக விஜய் தன்னை நினைத்துக் கொள்கிறார். அண்ணாவையும், எம்ஜிஆரையும் தவிர்த்துவிட்டு தமிழகத்தில் அரசியல் செய்வது சாத்தியமில்லை என்பதால் அவர்களை குறிப்பிட்டு இணைத்து பேசுகிறார். ஆனால் விஜய்யின் அரசியல் ஆசான் யார் என்பதுதான் தெரியவில்லை” என கூறியுள்ளார்.
Edit by Prasanth.K