தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதாகவும் வரும் டிசம்பர் மாதத்துடன் 27 மாவட்டங்களில் உள்ளாட்சி நிர்வாகிகளின் பதவிக்காலம் நிறைவடைவதை அடுத்து உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழக தேர்தல் ஆணையம் தயாராகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு மாநில தேர்தல் ஆணையம் பணிகளை தொடங்கியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. தேர்தலை நடத்தும் வகையில் வாக்குப்பெட்டிகளை தயார் நிலையில் வைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு 27 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடந்த நிலையில் அந்த தேர்தலில் தொடர்பான நபர்களின் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதத்துடன் நிறைவடைவதை அடுத்து டிசம்பர் மாதத்திற்கு முன்பே உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டமன்ற தேர்தல், பாராளுமன்ற தேர்தல் ஆகியவற்றில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற திமுக கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.