மாணவர்களை சுயமாக சிந்திக்க தூண்டும் கல்விமுறைதான் சிறந்த கல்விமுறை என்றும் அந்த வகையில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சிந்திக்க வைக்கின்றன, ஏன், எதற்கு என பகுத்தறிவுடன் கேள்வி கேட்கின்ற கல்வி முறை உள்ளது என்றும் அவர் கூறினார்.
தமிழ்நாடு பாடத்திட்டத்தில் படித்தவர்கள்தான் உயர் பொறுப்புகளில் உள்ளனர் என குறிப்பிட்ட அவர், தமிழ்நாடு அரசு பள்ளிகளில் படித்த பலர் இஸ்ரோ விஞ்ஞானிகளாக பணியாற்றியுள்ளனர் என்று கூறினார். பொறுத்துக்கொள்ள முடியாத வயிற்றெரிச்சல் பிடித்தவர்கள் பாடதிட்டத்தை குறைசொல்கிறார்கள் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.