உள்ளாட்சி தேர்தல்...கூடுதல் கால அவகாசம் !

Webdunia
புதன், 23 ஜூன் 2021 (16:05 IST)
உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்காக பணிகளை நிறைவுசெய்ய தமிழ்நாடு மாநில் தேர்தல் ஆணையத்திற்கு கூடுதல் காலம் அவகாசம் தேவைப்படுவதாக  தமிழக அரசு கூறியுள்ளது.

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியின்போது நிர்வாக பகிர்வு வசதிக்காக மாவட்டங்கள் பல பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இந்நிலையில் சட்டமன்ற கூட்டத்தில் புதிதாக உருவான 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுனர் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று இதுகுறித்து புதிய உத்தரவை பிறப்பித்துள்ள உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 15க்குள் புதிதாக பிரிக்கப்பட்டு உருவான 9 மாவட்டங்களிலும் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான கால அவகாசம் மிகவும் குறைவாக இருப்பதாகவும், உள்ளாட்சி தேர்தலை நடத்த கூடுதல் அவகாசம் தேவை எனவும் மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் தேர்தல் தனிஅலுவலர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுவதற்கான மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி தேர்தல் நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும்,தமிழகத்தில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளீல் தனி அலுவலர்களின் பதவிக்காலம் மேலும் 4 மாதங்கள் நீட்டிக்கப்படுவதாக கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்