இதனை தொடர்ந்து தேமுதிகவும் உள்ளாட்சி தேர்தல் விருப்பமனு விநியோகத்தை துவங்கியது. தேமுதிக தலைவர் விஜய்காந்த் விருப்பமனுக்களை வழங்கினார். மேலும், உள்ளாட்சி தேர்தலில் தொகுதி பங்கீடு பற்றி பேச எல்.கே.சுதீஷ் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தேமுதிக தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்.கே.சுதீஷ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் இளங்கோவன், மோகன்ராஜ், பார்த்தசாரதி, ஏ,எஸ்.அக்பர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். ஆனால், இந்த குழுவுக்கு சுதீஷை தலைமையாக போட்டது கட்சிக்குள் உள்ள சில முக்கிய நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம்.
கடந்த மக்களவை தேர்தலின் போது அதிமுக, திமுக என இரு கட்சிகளிடமும் ஒரே சமயத்தில் கூட்டணி குறித்தும் தொகுதி பங்கீடு குறித்தும் பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார் சுதீஷ். அதன் பின்னர் அதிமுகவிடம் கேட்டது கிடைக்காமல் கொடுத்தை வைத்து கூட்டணி அமைத்தது தேமுதிக.