மேயர் பதவிக்கான விருப்பமனு கட்டணம் ரூ.25,000, நகராட்சி தலைவர் பதவிக்கான விருப்பமனு கட்டணம் ரூ.10,000, வார்டு உறுப்பினர் பதவிக்கான விருப்பமனு கட்டணம் ரூ.5,000, பேரூராட்சி தலைவர் பதவிக்கான விருப்பமனு கட்டணம் ரூ.5,000, நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கான விருப்பமனு கட்டணம் ரூ.2,500, பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான விருப்பமனு கட்டணம் ரூ.500 என அதிமுக நிர்ணயித்துள்ளது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக அமைச்சர் ஜெயகுமார், அதிமுக ஏழைகளின் கட்சி எனவும் திமுக கோடீஸ்வர கட்சி என பேசியுள்ளார். ஆம், திமுக மேயர் பதவிக்கான விருப்ப மனு கட்டணத்தை ரூ.50,000 ஆக நிர்ணயித்து இருப்பதை குறிப்பிட்டு அவர் இவ்வாறு பேசியுள்ளார்.
மேயர் பதவிக்கான விருப்பமனு கட்டணம் ரூ.50,000, மாநகராட்சி மன்ற உறுப்பினர், பேரூராட்சித் தலைவர், மாவட்ட ஊராட்சித் தலைவர் ஆகிய பதவிக்கான விருப்பமனு கட்டணம் ரூ.10,000, நகராட்சித் தலைவர் பதவிக்கான விருப்பமனு கட்டணம் ரூ.25,000, நகராட்சி உறுப்பினர், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கான விருப்பமனு கட்டணம் ரூ.5,000, பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கான விருப்பமனு கட்டணம் ரூ.2,500 என திமுக நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.