உள்ளாட்சி தேர்தலில் சேலம், வேலூர், சென்னை ஆகிய மாநகராட்சி தொகுதிகளை கேட்க பாமக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் சேலம் முதல்வரின் சொந்த தொகுதி என்பதால் அந்த தொகுதி கிடைப்பது சந்தேகம் என்றும் பாமக தரப்பில் இருந்து கூறப்படுகிறது
இந்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளும் பெரும்பாலான மாநகராட்சி தொகுதிகளை கேட்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக கூட்டணியில் உள்ள கட்சிகள் மாநகராட்சி தொகுதிகளை அதிக அளவில் குறி வைத்துள்ளதால் அதிமுக மற்றும் திமுக தலைமை அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது