கருகும் நெற்பயிருக்கு தண்ணீர் கேட்டு பிரதமருக்கு தபால் அனுப்பும் விவசாயிகள் சங்கம்..!

Webdunia
புதன், 9 ஆகஸ்ட் 2023 (10:15 IST)
கருகும் நெருப்பயிருக்கு தண்ணீர் கேட்டு பிரதமருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் நடத்தியது. 
 
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த போராட்டத்தின் போது  பயிர் காப்பீடு செய்த ஒவ்வொரு விவசாயிக்கும் தனிப்பட்ட முறையில் இழப்பீடு வழங்கும் வகையில் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்றும்  காவேரி டெல்டா பகுதியில் கருகும் நெற்பயிர்களை பாதுகாக்க காவிரிகள் விரைவில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றும் 10 அம்ச் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷமிட்டனர். 
 
மேலும் பிரதமர் அலுவலகத்திற்கு கோரிக்கைகள் எழுதப்பட்ட ஆயிரம் தபால் அட்டைகளும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினரால் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்