தரையில் அழுது புரண்ட தலைமை ஆசிரியை... மிரண்டு ஓடிய மாணவர்கள்...வைரல் வீடியோ

Webdunia
வியாழன், 21 நவம்பர் 2019 (14:19 IST)
திண்டுக்கல் மாவட்டம்  குஜிலிம்பாறையில் உள்ள அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை தரையில் விழுந்து அழுது புரண்டார். அதைப்பார்த்த மாணவர்கள் மிரண்டு ஓடினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை ஒன்றியத்தில்  உள்ள அய்யம்பட்டியில் ஒரு அரசுத் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது.  இங்கு , இந்திரா என்பவர் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். 
 
ஆனால், இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 2 பேர்தான். எனவே, என்னால் பாடம் நடத்த முடியாத சூழல் உள்ளது. அதனால் என்னை வேறு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டம் என பள்ளிக்கல்வித்துறைக்கு விண்ணபித்துள்ளார்.
 
ஆனால், இதுகுறித்து அதிகாரிகள் உரிய முடிவெடிக்க வில்லை என தெரிகிறது. அதனால் மனமுடைந்த இந்திரா இன்று பள்ளியில் தரையில் கீழே விழுந்து அழுது புரண்டார். அதைப்பார்த்த இரண்டு மாணவர்கள் மிரண்டு ஓடினர்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்