இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியைச் சேர்ந்த லட்சுமணன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், " நான் நடிகர் விஜயின் தீவிர ரசிகர். திண்டுக்கல் சின்னாளபட்டி ஸ்ரீ லட்சுமி திரையரங்கில், பிகில் வெளியாகியுள்ளது. இதையொட்டி திரையரங்கு வளாகத்தில் நடிகர் விஜய்க்கு இரண்டரை அடி உயர மெழுகுச் சிலை வைத்தும், டிரம் அடித்துக் கொண்டாடவும் விஜய் ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதற்கு திரையரங்கு உரிமையாளர் அனுமதி வழங்கியுள்ளார். ஆனால் போலீஸார் அனுமதி வழங்க மறுக்கின்றனர். எனவே திரையரங்கு வளாகத்தில் அக்டோபர் 27 வரை விஜய் மெழுகு சிலை அமைக்கவும், டிரம் அடித்து கொண்டாடவும் அனுமதி வழங்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்.’ எனக் கோரியிருந்தார். அவரது மனுவை விசாரித்த நீதிபதி திரையரங்க உரிமையாளரை எதிர்மனுதாரராக சேர்த்து வழக்கின் விசாரணையை நவம்பர் 8 ஆம் தேதி ஒத்திவைத்தார்.