இந்தியா மீது அமெரிக்கா அதிகமான வரி விதித்துள்ள நிலையில் இன்று ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
ஜப்பானில் பேசிய பிரதமர் மோடி “இந்தியா - ஜப்பான் இடையேயான ராஜாங்க, பொருளாதார உறவுகள் நாளுக்கு நாள் சிறப்படைந்து வருகிறது. உலக அளவில் இந்தியாவின் வளர்ச்சி அனைத்து நாடுகளாலும் உற்று நோக்கப்படுகிறது. உலக நாடுகள் இந்தியாவை உற்று மட்டும் நோக்கவில்லை, இந்தியாவை நம்புகின்றன.
இந்தியா தனது பாதுகாப்பு துறை மற்றும் விண்வெளி துறையில் தனியார் பங்களிப்பை அனுமதித்ததன் மூலம் புதிய உச்சங்களை தொட்டுள்ளது. அதை தொடர்ந்து விரைவில் அணுசக்தி துறையிலும் தனியார் பங்களிப்பை அனுமதிக்க உள்ளோம்
தெற்கு உலக வணிகத்தில் ஜப்பானிய வர்த்தகத்தில் இந்தியா ஒரு முக்கிய காரணியாக செயல்பட்டு வருகிறது. அனைவரும் இணைந்து ஸ்திரமான, வளர்ச்சி மற்றும் செழுமை மிக்க ஆசிய நூற்றாண்டை உருவாக்குவோம்” என பேசியுள்ளார்.
இந்தியா - ரஷ்யா இடையேயான கச்சா எண்ணெய் வணிகத்தை கண்டித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியாவிற்கு 50 சதவீதம் வரி விதித்துள்ள நிலையில் இந்தியாவின் ஜவுளித்துறை உள்ளிட்ட பல துறைகள் இழப்பை சந்திக்கும் அபாயம் எழுந்துள்ளது. தொடர்ந்து அமெரிக்கா பாகிஸ்தானோடு நட்புறவாடி வருவதும் இந்தியாவை அதிருப்தியில் தள்ளியுள்ளது.
அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சமாட்டோம் என ஏற்கனவே உறுதியாக கூறிவிட்ட பிரதமர் மோடி ஆசிய நாடுகளுடனான இந்தியாவின் உறவை வலுப்படுத்தும் பணிகளில் இறங்கிவிட்டார். ஏற்கனவே சீனாவுடன் நல்ல நட்புறவு ஏற்பட்டுள்ள நிலையில் இமாச்சலம் வழியாக இந்தியா - சீனா புதிய வணிக பாதை அமைக்கப்பட உள்ளது.
இந்நிலையில் இன்று ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி, ஜப்பான் - இந்தியா வர்த்தக உறவை வலுப்படுத்தும் விதமாக பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
Edit by Prasanth.K