இந்த நிலையில், மயிலாப்பூர் இந்து நிதி நிறுவனத்தின் முதல்வர் தேவநாதன் யாதவ் பாஜக சார்பில், மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் நிலையில், நிறுவனம் சிக்கலில் மாட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது, வைப்புத்தொகை மீதான வட்டிகள் தாமதம், முதிர்ச்சி அடைந்த முதலீடுகள் சிறுக சிறுக வழங்கப்படுவதாக கூறப்படும் நிலையில் வாடிக்கையாளர் பீதியில் உள்ளனர்.
இந்நிறுவனத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வைப்புத் தொகை உள்ள நிலையில், மொத்தமாக ரூ.525 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. தற்போது ஒரே நேரத்தில் அதிகமானோர் நிதி நிறுவனத்தில் பணத்தை திரும்பக் கேட்டு வருவதால் சிக்கலான நிலை உருவாகியுள்ளது.