வெறும் பேப்பரில் மட்டும் இருக்க கூடாது: மகளிருக்கான இடஒதுக்கீடு குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன்..!
வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (18:13 IST)
மகளிருக்கான இட ஒதுக்கீடு என்பது வெறும் பேப்பரில் மட்டும் இருக்கக்கூடாது என்றும் நடைமுறையில் வரவேண்டும் என்றும் நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
சமீபத்தில் பாராளுமன்றத்தில் நடந்த சிறப்பு கூட்ட தொடரில் மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு குறித்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும் இந்த மசோதா 2029 ஆம் ஆண்டு தான் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த மசோதா குறித்து கருத்து தெரிவித்த இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் நாடாளுமன்றத்தில் மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு வரவேற்கப்பட வேண்டிய ஒன்று, ஆனால் இது வெறும் பேப்பரில் மட்டுமே இல்லாமல் நடைமுறைக்கு வரவேண்டும்
பதவியில் இருக்கும் பெண்களுக்கு பின்னால் அவர்களது கணவர் மற்றும் உறவினர்கள் செயல்பட்டு வருகிறார்கள். அவ்வாறு இல்லாமல் பெண்கள் தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்