விஜயலட்சுமி விவகாரத்தில் ஆலோசனை கூற தயார்: லட்சுமி ராமகிருஷ்ணன்..!
வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (16:53 IST)
விஜயலட்சுமி விவகாரத்தில் ஆலோசனை கூற தயாராக இருக்கிறேன் என நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்து புகார் அளித்தார் என்பதும் அந்த புகார் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் திடீரென அவர் தனது புகாரை வாபஸ் பெற்றுள்ளார் என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் இந்த விவகாரம் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் சீமான் மற்றும் விஜயலட்சுமி விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என்னிடம் கேமரா முன் வந்து பேசினால் உரிய ஆலோசனைகளை கூற தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்தார்.
ஆனால் அதே நேரத்தில் தனிப்பட்ட முறையில் இந்த விவகாரத்தில் என்னால் கருத்து கூற முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்