மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு என்பது ஏமாற்று வேலை.. அமைச்சர் மனோ தங்கராஜ்

வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (16:10 IST)
நாடாளுமன்றம் மற்றும் சட்டபேரவைகளில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு என்னும் அப்பட்டமான ஏமாற்று வேலையை தான் மோடி அரசு செய்திருக்கிறது என  அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
 
'Socialist, Secular' எனும் வார்த்தைகளை இந்திய அரசியலமைப்பு முன்னுரையில் இருந்து எடுத்தவர்களுக்கு, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தை உடனே நடைமுறைப்படுத்துவது கடினமா? அதற்கான வாய்ப்பு இல்லையா?;
 
இப்போதே தேர்தல் வைத்தால், உடனே தேர்தல் நடத்த முடியும் என தேர்தல் ஆணையம் கூறுகிறது, ஆனால் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை மட்டும் 2029ம் ஆண்டுக்குள் அமல்படுத்துவோம் என்கிறார்கள், இது அப்பட்டமான தேர்தல் விளையாட்டு என அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி அளித்துள்ளார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்