மது விலக்கு கேட்டு போராடிய பெண் போராளியின் அரசியல் கட்சி..பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம்..!

Siva

ஞாயிறு, 18 பிப்ரவரி 2024 (11:00 IST)
தமிழகத்தில் அதிமுக எப்போது எல்லாம் ஆட்சியில் இருக்கிறதோ அப்போது மட்டும் மதுவிலக்கு கேட்டு போராடும் பெண் போராளி நந்தினி ஆனந்தன் என்பவர் புதிய அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

சமூக போராளி என்று அடையாளம் காணப்படும் இவர் புதிய அரசியல் கட்சியை தொடங்கி நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கடந்த அதிமுக காட்சி காலத்தில் மதுவிலக்கு கேட்டு போராடிய இந்த பெண் போராளி திமுக ஆட்சி வந்த பிறகு எந்த போராட்டத்தையும் நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தேர்தல் வாக்கு இயந்திரத்துக்கு எதிராக தனது போராட்டத்தை ஆரம்பிக்க இருப்பதாகவும் விரைவில் தனது புதிய கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட போவதாகவும் பாஜகவுக்கு எதிராக இரண்டாவது சுதந்திர போராட்டத்தை நடத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வாக்கு இயந்திரம் மூலம் தேர்தல் நடந்தால் மோசடி செய்து பாஜக மீண்டும் வெற்றி பெற்று விடும் என்றும் அதன் பிறகு நாட்டில் ஜனநாயகம் என்பதே இருக்காது என்றும் கூறியுள்ள லட்சுமி ஆனந்தன் வரும் பாராளுமன்ற தேர்தலை வாக்குச்சீட்டில் தான் நடத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்