தோண்ட தோண்ட பெண் போராளிகளின் எலும்புகள் .. இலங்கையில் பரபரப்பு

திங்கள், 3 ஜூலை 2023 (21:31 IST)
இலங்கை நாட்டின் முல்லைத் தீவில் பெண் போராளிகளின் உடல்களுடன் மனித சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை நாட்டின் முல்லைத் தீவில் பெண் போராளிகளின் உடைகளுடன் மனித சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொக்குத்தொடுவாய் மத்திய பகுதியில் நீர் இணைப்பிற்காக  கனரக இயந்திரம் கொண்டு குழி தோண்டப்பட்டது. அப்போது, உள்ளே மனித எச்சங்கள் தென்பட்டுள்ளன. இதைப் பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அதில், பெண்களின் மேலாடை, பச்சை சீருடை, மற்றும் எலும்புகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்