சென்னையில் சேட்டையை தொடங்கிய ஓலா டாக்ஸி: இளம்பெண் பாலியல் வன்கொடுமை

Webdunia
செவ்வாய், 27 செப்டம்பர் 2016 (12:52 IST)
ஓலா கால் டாக்சியில் பயணித்த பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  


 


 
சென்னை ஈஜ்சம்பாக்கத்தைச் சேர்ந்த இளம்பெண் அண்ணாநகர் தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிகிறார். ஞாயிற்று கிழமை இரவு பணிக்கு செல்ல வழக்கம் போல் ஓலா கால் டாக்ஸி புக் செய்து, அதில் பயணித்துள்ளார்.
 
வீட்டில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் கார் விஜிபி அமைதி கோயில் நிறுத்தப்பட்டு, அதில் இரண்டு நபர்கள் ஏறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் ஓட்டுநரிடம் கேட்ட போது, அவர்கள் என் நண்பர்கள் செல்லும் வழியில் இறங்கிவிடுவார்கள் என்று கூறியுள்ளார்.
 
சந்தேகம் அடைந்த பெண் அந்த பகுதியில் இருக்கும் அவரது நண்பருக்கு இதுகுறித்து தெரிவித்துள்ளார். பின்னர் காரை வேறு திசையில் வேகமாக ஓட்டியதோடு காரில் இருந்தவர்கள் பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளனர்.
 
அப்போது பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு பின்னே காரில் சென்றவர்கள் காரை விரட்டி பிடித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே அந்த பெண்ணின் நண்பர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
 
ரோந்து பணியில் இருந்த காவல்துறையினர் விரைந்து சென்று கால் டாக்ஸி ஓட்டுநரை கைது செய்தனர். காரில் இருந்த மற்ற இரண்டு நபர்கள் தப்பி ஓடிவிட்டார்கள்.
 
மேலும் கால் டாகிஸில் பயணிப்பவர்களை தவிர வேறு யாரையும் ஏற்ற கூடாது என்பது விதிமுறை என்பதால், அந்த ஓட்டுநர் பணி நீக்கம் செய்யப்பட்டதாக ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்