ஆ ராசாவை அவ்வாறு பேச சொன்னதே ஸ்டாலின் தான்: எல் முருகன்

Webdunia
செவ்வாய், 30 மார்ச் 2021 (08:45 IST)
சமீபத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்பியுமான ஆ ராசா முதலமைச்சரின் தாயார் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்ததாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முதலமைச்சர் பழனிசாமி இது குறித்து கண்ணீருடன் தேர்தல் பிரச்சாரத்தில் கூறினார் என்பதும் இதனை அடுத்து நேற்று ஆ ராசா மன்னிப்பு கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனையடுத்து இந்த பிரச்சனை முடிவுக்கு வரும் என்று கருதப்பட்ட நிலையில் மீண்டும் இந்த பிரச்சனை தற்போது தலைதூக்கியுள்ளது. முதல்வரின் தாயார் குறித்து ஆ ராசா பேசியதற்கு ஸ்டாலின் எந்தவிதத்திலும் கண்டிக்க் மாட்டார் என்றும் ஏனெனில் அவரை அவ்வாறு பேச சொன்னதே ஸ்டாலின் தான் என்றும் தமிழக பாஜக தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார் 
 
தாராபுரத்தில் இன்று பிரதமர் மோடி வருகையை அடுத்து பொதுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்து வரும் எல் முருகன் செய்தியாளர்களிடம் இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போது இவ்வாறு தெரிவித்தார் 
 
ஆ ராசா பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்டாலும் தேர்தல் ஆணையம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் எந்தவிதமான நடைபெற்ற என்பது குறித்து விரைவில் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்