இந்த சந்திப்பின்போது பிரதமர் மோடி குஷ்புவின் மாமியாரிடம் ஆசி பெற்றார். இது குறித்த புகைப்படங்களை நடிகை குஷ்பு தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் தனது மாமியார் பிரதமரின் தீவிர ரசிகை என்றும் இந்த 92 வயதில் அவர் பிரதமர் மோடியை சந்தித்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார் என்பதும் அவரது நீண்டநாள் கனவு நனவாகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி, தனது மாமியாரை அன்புடனும் மரியாதையுடனும் வரவேற்றார் என்றும் அவர் ஏன் உலகம் முழுவதும் ஒரு பேசப்படும் நபராகவும், ஆசீர்வதிக்கப்பட்டவராக இருக்கிறார் என்பது புரிந்தது என்று தெரிவித்தார்.