குரங்கணி தீ விபத்து: மேலும் ஒருவர் பலி

Webdunia
வியாழன், 5 ஏப்ரல் 2018 (20:07 IST)
தேனி குரங்கணி  தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
 
தேனி மாவட்டம் குரங்கணி காட்டுப்பகுதியில் கடந்த மாதம் ஏற்பட்ட தீ விபத்தில் டிரெக்கிங் மற்றும் சுற்றுலா சென்ற 36 பே சிக்கி கொண்டனர். அதில் சம்பவ இடத்திலேயே 9 பேர் உடல்கருகி பரிதாபமாக பலியாகிய நிலையில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒவ்வொருவராக மரணம் அடைந்ததால் நேற்று வரை பலி எண்ணிக்கை 22ஆக இருந்தது.
 
இந்த நிலையில் விபத்தில் சிக்கி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுவேதா  சிகிச்சை பலனின்றி  இன்று  உயிரிழந்துள்ளார்.
 
இதன் மூலம் குரங்கணி தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக இன்று உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்