இந்த அமொவுண்ட் எங்க பட்ஜெட்டிலேயே இல்லையே... சரண்டரான அழகிரி!!

Webdunia
வெள்ளி, 18 அக்டோபர் 2019 (08:51 IST)
நாங்குநேரியில் கைப்பற்ற பணம் காங்கிரஸ் கட்சியினுடையது  என பொய் தகவல் பொய் தகவல் பரப்பி வருகிறார்கள் என கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். 
 
தமிழக சட்டமன்ற தொகுதிகளான நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21 அன்று இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் இரு தொகுதிகளுகும் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.
 
இந்நிலையில் நாங்குநேரி பகுதிகளில் சட்டவிரோதமாக ஓட்டுக்கு பணம் அளிக்கப்படுவதாக புகார் வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஆதாரம் இல்லாததால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட அம்பலம் பகுதியில் ஒரு வீட்டில் ஓட்டுக்கு கொடுப்பதற்காக பணத்தை பதுக்கி வைத்திருந்ததாக தெரியவந்தது. 
இதை அறிந்ததும் அங்கு விரைந்த பொதுமக்கள் பணம் இருப்பதை கண்டுபிடித்ததோடு அதிகாரிகளுக்கு தகவலும் கொடுத்தனர்.  உடனடியாக விரைந்த அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து, இவற்றை பதுக்கி வைத்திருந்தது யார் என்பது குறித்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று நடந்த இந்த சம்பவம் நாங்குநேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில், நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதிகுட்பட்ட மூலைக்கரைபட்டியில் தமிழ் மாநில காங்கிரசிலிருந்து விலகி 100-க்கும் மேற்பட்டோர் காங்கிரசில் இணைந்தனர். இந்த நிகழ்வில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி பங்கேற்று இருந்தார். 
அப்போது அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு, அம்பலம் கிராமத்தில் காங்கிரஸ் கட்சியினுடைய பணத்தை பறிமுதல் செய்ததாக பொய் தகவல் சொல்கிறார்கள். 50 லட்ச ரூபாய் பணம் என்பது எங்களுடைய பட்ஜெட்டில் கிடையாதே என கூறினார். 
 
இதற்கு முன்னர் இவர் காங்கிரஸ் கட்சி முகவும் ஏழ்மையான கட்சி என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்