மக்கள் குறை சொல்லி கொண்டிருந்த நேரத்தில் வாட்ஸ் அப் பார்த்த பெண் அதிகாரி

Webdunia
திங்கள், 8 ஜனவரி 2018 (22:59 IST)
கோவில்பட்டியில் உள்ள பொதுமக்கள் தங்களுடைய குறைகளை கோட்டாட்சியரிடம் கூறி கொண்டிருந்தபோது அந்த அதிகாரி மக்களின் குறைகளை செவிசாய்க்காமல் தனது மொபைல் போனில் வாட்ஸ் அப் பார்த்து கொண்டிருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கோவில்பட்டி கோட்டாட்சியர் அனிதா என்ற அதிகாரியை அந்த பகுதியை சேர்ந்த காட்டுநாயக்கன் பிரிவை சேர்ந்தவர்கள் குறைகளை கூற சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது தங்கள் பிரிவை சேர்ந்தவர்களுக்கு சாதிச்சான்றிதழ் வழங்க தாமதம் ஆவதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சலுகைகளை பெற முடியாமல் இருந்ததாக தங்களுடைய குறைகளை தெரிவித்தனர்.

இந்த நிலையில் காட்டுநாயக்கன் பிரிவினை சேர்ந்தவர்கள் குறைகளை கூறிக்கொண்டிருக்கும்போது கோவில்பட்டி கோட்டாட்சியர் அனிதா தன்னுடைய மொபைல் போனில் வாட்ஸ் அப் மெசேஜ்களை பார்த்து கொண்டு அவர்கள் சொல்வதை கவனிக்காமல் இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனே அலுவலகத்தை விட்டு வெளியேறி போராட்டம் செய்தனர். வரும் 17ஆம் தேதிக்குள் தங்களுக்குரிய சாதிச்சான்றிதழை வழங்கவில்லை என்றால் போராட்டம் தீவிரமாகும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்