இன்றைய நவீன உலகத்தில் மக்கள் பலரும் உடல் எடை அதிகரிப்பின் காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர். பலரது கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகிறார்கள். ஆனால் அவர்களை குதூகலப்படுத்தும் வகையில் ஒரு ஆய்வின் முடிவு வெளியாகியுள்ளது. பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் அதிக உடல் எடையுடைய குண்டு மனிதர்களின் வாழ்க்கை நிலை குறித்து சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டனர். 35 வயதிலிருந்து 75 வயதுக்குட்பட்ட, 50 ஆயிரத்திற்கு மேற்பட்டோரிடம் ஆய்வு நடத்தினர். அவர்களது உயரம், உடல் எடை குறித்த பி.எம்.ஐ(BMI - Body Mass Index) தகவல்கள் சேகரிக்கப்பட்டது.