கேரளாவில் கரை ஒதுங்கிய 40 உடல்கள்; கன்னியாகுமரியை சேர்ந்த மீனவர்களா?

வெள்ளி, 15 டிசம்பர் 2017 (08:28 IST)
கேரளாவில் உள்ள மருத்துவமனைகளில் மொத்தம் 40 உடல்கள் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளது. இவர்கள் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஓகி புயலால் குமரி மீனவ மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளானார்கள். பல மீனவ மக்கள் தங்கள் வாழ்வாதாரம் மற்றும் சொந்த பந்தங்களை இழந்து தவித்து வருகின்றனர். காணாமல் போன மீனவர்களை கண்டுபிடித்து தரக்கோரி மீனவர்கள் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். குமரிக்கு சென்ற தமிழக முதல்வர் பழனிசாமி ஓகியால் உயிரிழந்த மீனவர்களுக்கு நிவாரணத் தொகையாக 20 லட்சம் ரூபாய், தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்
 
இந்நிலையில் அரசு நடத்திய கணக்கெடுப்பில் 104 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 433 பேர் காணாமல் போயிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் கேரள கடல் பகுதியில் சென்று மீன்பிடி தொழில் செய்து வழக்கம். எனவே ஓகி புயலில் சிக்கி கேரளாவில் கரை ஒதுங்கிய 40 உடல்கள் குமரியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என கணிக்கப்படுகிறது. எனினும் டிஎன்ஏ பரிசோதனைக்கு பின்னரே இத்தகவல் உறுதி செய்யப்பட்டு உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட இருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்