சாத்தான்குளம் மரணத்திற்கு ஒரு நியாயம், கோவை மரணத்திற்கு ஒரு நியாயமா? கோவை சத்யன்

Webdunia
செவ்வாய், 18 ஜனவரி 2022 (16:43 IST)
சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் அடைந்த போது ஒரு நியாயம் கூறிய அப்போதைய எதிர்க்கட்சி தலைவர்  முக ஸ்டாலின் தற்போது முதல்வரான பின் ஒரு நியாயம் கூறுகிறார் என அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை சத்யன் குற்றம்சாட்டியுள்ளார் 
 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்று சாத்தான்குளம் தந்தை மகன் இறந்ததற்கு எதிர்க்கட்சித் தலைவராக அப்போது இருந்த முக ஸ்டாலின் காவல்துறைக்கு ஒரு உயிரை எடுப்பதற்கு யார் அதிகாரம் கொடுத்தது என்றும் இதற்கு முதல்-அமைச்சர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் வீர வசனம் பேசினார்
 
ஆனால் தற்போது நகை திருட்டு வழக்கில் கடந்த 11ம் தேதி மாற்றுத்திறனாளி பிரபாகரனை போலீசார் கைது செய்த நிலையில் விசாரணையின்போது அவர் மரணம் அடைந்தார். ஆனால் இப்போது முதல்வராக ஸ்டாலின் இருக்கும்போது அவர் தானே இந்த மரணத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். ஏன் பொறுப்பு ஏற்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார் 
 
இந்த கேள்விக்கு முதல்வர் முக ஸ்டாலின் தரப்பில் இருந்து என்ன பதில் வரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்