ஆம் ஆத்மியின் பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு!

செவ்வாய், 18 ஜனவரி 2022 (12:58 IST)
உத்தரப்பிரதேசம் பஞ்சாப் கோவா உள்பட 5 மாநில தேர்தல் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பதை குறிப்பாக பஞ்சாப் மாநில தேர்தல் தேதி நேற்று மாற்றப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக மோதி வரும் நிலையில் புதிதாக ஆம் ஆத்மி கட்சியும் தனித்து போட்டியிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏற்கனவே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தால் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதனால் பெண்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. சற்றுமுன் பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் வேட்பாளர் பகவந்த்மான் என அக்கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்