கோவை விடுதி காப்பாளர் புனிதா நீதிமன்றத்தில் சரண்

Webdunia
புதன், 1 ஆகஸ்ட் 2018 (12:44 IST)
கோவையில் தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த கல்லூரி மாணவிகளை பணத்தாசை காட்டி தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றதாக அந்த விடுதியின் வார்டன் புனிதா என்பவர் மீது கடந்த சில நாட்களுக்கு முன் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து வார்டன் புனிதா மற்றும் விடுதியின் உரிமையாளர் ஜெகந்ந்தாதன் ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் இருவரும் தலைமறைவாகினர். புனிதா, ஜெகந்நாதன் ஆகிய இருவரையும் பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தலைமறைவாக இருந்த விடுதி உரிமையாளர் ஜெகந்நாதன், ஆலங்குளம் கிணறு ஒன்றில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சற்றுமுன் விடுதியின் வார்டன் புனிதா கோவை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். சரண் அடைந்த புனிதாவிடம் ஜெகந்நாதன் மரணம் குறித்தும் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்ற விவகாரம் குறித்து விசாரணை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்