தங்க தமிழ்ச்செல்வனுக்குப் பதவி – அதிருப்தியில் கி வீரமணி ?

Webdunia
சனி, 31 ஆகஸ்ட் 2019 (10:46 IST)
தங்க தமிழ்ச்செல்வனுக்கு திமுகவில் கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டது தொடர்பாக அக்கட்சிக்குள் சலசலப்புகள் எழுந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதிமுக இரண்டாக உடைந்தபோது அதிலிருந்து விலகி தினகரன் துவங்கிய அமமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வன் அவருக்கு வலது கைபோல செயல்பட்டார். பின்னர் டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட மனகசப்பால் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். அவர் கட்சியில் இணைந்து சில மாதங்கள் ஆகியும் அவருக்கு எந்த ஒரு பதவியும் வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் இன்று அவருக்கு திமுகவில் கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஏற்கனவே திமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக இருக்கும் ஆ ராசா மற்றும் திருச்சி சிவா ஆகியோரோடு இணைந்து செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது.

திமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக தங்க தமிழ்ச்செல்வன் நியமிக்கப்பட்டதற்கு திமுகவின் தொண்டர்கள் மற்றும் பிரதிநிதிகள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி திராவிடர் கழகத்தின் மூத்த தலைவரான ஆசிரியர் கி வீரமணியும் எதிர்மறையானக் கருத்தையேக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தனக்கு நெருக்கமானவர்களிடம் ’வேறு ஏதாவது பதவிக் கொடுத்திருக்கலாம். எதற்காக கொள்கை பரப்பு செயலாளர் பதவி கொடுக்க வேண்டும்’ என அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்