வைகோ மீதான அவதூறு வழக்கு: சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (11:03 IST)
முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து சர்ச்சைக்குரிய வகையிலான கருத்துக்களுடன் கூடிய கடிதம் ஒன்றை முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கு எழுதியதாக வைகோ மீது கடந்த 2006ஆம் ஆண்டு திமுக அவதூறு வழக்கு ஒன்று தொடர்ந்தது
 
திமுக தொடர்ந்த இந்த அவதூறு வழக்கின் விசாரணை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து வைகோ இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.
 
இந்த நிலையில் திமுக தொடர்ந்த அவதூறு வழக்கில் மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்ளைவை எம்பியுமான வைகோவை விடுவித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்பதால் வைகோவை விடுதலை செய்வதாக சிறப்பு நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது
 
இந்த தீர்ப்பு காரணமாக வைகோவின் ராஜ்யசபா எம்பி பதவிக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீர்ப்பை அடுத்து வைகோவுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்