கேரள உள்ளாட்சி தேர்தல்: படுதோல்வி அடைந்த பாஜக!

Webdunia
புதன், 16 டிசம்பர் 2020 (11:10 IST)
கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தல் உள்பட பல தேர்தல்களில் பாஜக தொடர் வெற்றி பெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். ஆனால் மக்களவைத் தேர்தலில் மட்டுமன்றி அதற்கு பின்வரும் தேர்தல்களிலும் பாஜக தொடர்ந்து பின்னடைவில் இருப்பது தமிழகம் மற்றும் கேரளாவில் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சமீபத்தில் கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நடந்த நிலையில் இந்த தேர்தலில் பெருவாரியான வார்டுகளில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற முனைப்பில் பாஜக தீவிர பிரச்சாரம் செய்தது
 
இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில் பாஜக இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்து உள்ளது தெரிய வருகிறது. கேரளாவில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 401 கிராம ஊராட்சிகளில் ஆளும் இடதுசாரி கூட்டணி கட்சிகள் முன்னிலை வகித்து வருகின்றன. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி 329 கிராம ஊராட்சிகளில் முன்னிலை வகித்து வருகிறது
 
ஆனால் பாஜக மிகவும் சொற்ப தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் இருப்பதாகவும் முன்னிலை விகிதாச்சாரம் மிகவும் குறைவாக இருப்பதால் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வாய்ப்பு இருக்காது என்ற நிலை ஏற்படக்கூடும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
தமிழகம் மற்றும் கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களில் பாஜக தலைதூக்குமா? என்ற சந்தேகம் இந்த தேர்தலின் முடிவை காட்டுகிறது என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்