எங்களைத் திருடர்கள் என்று குற்றம் சாட்டும் பாஜகவினர்களை விட மிகப்பெரிய திருடர்கள் யாரும் கிடையாது என்றும், அவர்கள் மிகப்பெரிய கொள்ளைக்காரர்கள் எனவும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இந்த நிலையில் சமீபத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மம்தா பானர்ஜி மேற்கு வங்க கவர்னரையும் மத்திய அரசையும் மிகவும் கடுமையாக பேசினார். நாங்கள் மேற்கு வங்க மக்களுக்கு பணியாற்றி வருகிறோம் என்றும் ஆனால் எங்களை எப்போதும் மத்திய அரசு திருடர்கள் என்று கூறி வருகிறது என்றும் பாஜகவினர்களை விட திருடர்கள் வேறு யாரும் கிடையாது என்றும் அவர்கள் மிகப்பெரிய கொள்ளைக்காரர்கள் என்றும் கூறியுள்ளார்