கேரள குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலி.. தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு..!

Webdunia
ஞாயிறு, 29 அக்டோபர் 2023 (14:17 IST)
கேரள குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கேரளாவை ஒட்டியுள்ள கோவை, தேனி, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட எல்லைகளில் சோதனையை தீவிரப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கோவை, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் தமிழக போலீசாருடன் வனத்துறையும் இணைந்து தீவிர கண்காணிப்பு பணியை தொடர்ந்து வருகின்றனர்.

முன்னதாக கேரளாவில் 2,500 பேர் கூடியிருந்த கிறிஸ்தவ கூட்டரங்கில் வெடி விபத்து தொடர்பாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயனுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்தினார். வெடி விபத்து மற்றும் மீட்பு பணிகள் குறித்து அமித்ஷா கேட்டறிந்தார். மேலும் என்.ஐ.ஏ மற்றும் தேசிய பாதுகாப்பு படையினரை சம்பவ இடத்திற்கு செல்ல அமித்ஷா உத்தரவு  பிறப்பித்துள்ளார்.

2,500 பேர் கூடியிருந்த கிறிஸ்தவ கூட்டரங்கில் பயங்கர வெடி விபத்தில் ஒருவர் பலி, 5 பேர் கவலைக்கிடம் என தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து 3 முறை பலத்த சத்தத்துடன் வெடித்ததால் வெடிகுண்டாக இருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்