சசிகலா செய்த அதே தவரை எடப்பாடி பழனிசாமி செய்கிறார்: கேசி பழனிசாமி

Webdunia
ஞாயிறு, 31 ஜூலை 2022 (15:53 IST)
சசிகலா செய்த அதே தவரை எடப்பாடி பழனிசாமி செய்கிறார்: கேசி பழனிசாமி
சசிகலா செய்த அதே தவறை தான் எடப்பாடி பழனிசாமி செய்கிறார் என கே சி பழனிசாமி தெரிவித்துள்ளார்
 
இன்று செய்தியாளர்களை சந்தித்த கேசிபழனிச்சாமி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தான் பொதுச்செயலாளராக வேண்டும் என்பதற்காக சசிகலா செய்த அதே தவறை தான் தற்போது எடப்பாடி பழனிசாமி செய்துள்ளார் என்று கூறியுள்ளார்
 
மேலும் இடைக்கால பொதுச்செயலாளர் பதவிக்கு 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேண்டும் என்று 10 மாவட்ட செயலாளர்கள் வழி மொழிய வேண்டும் என்றும் இந்த இருபது மாவட்ட செயலாளர்களுக்கும் தலா ஒரு கோடி ரூபாய் அளவிற்கு எடப்பாடி கொடுத்திருகின்றார் என்று பேசியுள்ளார் 
 
சசிகலா பொதுச் செயலாளர் பதவியை பெறா முயற்சித்த போது அதை எதிர்த்த எடப்பாடி பழனிசாமி இன்று அதே தவறை செய்து வருகிறார் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்