எல்லாரும் தேசிய கொடியை Common DP வைங்க! – பிரதமர் மோடி வேண்டுகோள்!

Webdunia
ஞாயிறு, 31 ஜூலை 2022 (15:09 IST)
ஆகஸ்டு மாதம் நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் தேசிய கொடியை Common DP ஆக வைக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாதம்தோறும் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாற்றும் “மன் கீ பாத் (மனதின் குரல்)” நிகழ்ச்சி ஒலிபரப்பப்படுகிறது. இந்த மாதத்திற்கான மனதின் குரல் நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பானது.

அதில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா கொரோனாவை கட்டுப்படுத்துவதில் பெரும் வெற்றியடைந்துள்ளதாக பேசினார். அதேசமயம் கொரோனா பாதிப்புகள் இன்னும் நீடித்து வருவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பின்னர் நாட்டின் 75வது சுதந்திர தினம் குறித்து பேசிய அவர், இந்தியாவின் சுதந்திர கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கையாவின் பிறந்தநாளான ஆகஸ்டு 2 முதல் சுதந்திர தினமான ஆகஸ்டு 15 வரை நாட்டு மக்கள் தங்கள் சமூக வலைதள முகப்பு புகைப்படத்தில் சுதந்திர கொடியை Common DP ஆக வைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்