ஐபிஎல் மூலம் பிரபலமான கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங், சமாஜ்வாடி எம்.பி., ஐ திருமணம் செய்ய போவதாகவும், சமீபத்தில் இவர்களது நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்து முடிந்ததாகவும் தகவல்கள் உள்ளன.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த இடது கை பேட்ஸ்மேன் ரிங்கு சிங், கடந்த 2023 ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தா அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடிய இவர், டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் இந்திய அணிக்காக இவர் விளையாட உள்ளார்.
இந்த நிலையில், 27 வயதாகும் ரிங்கு சிங், சமாதி கட்சி எம்பி பிரியா சரோஜ் என்பவரை திருமணம் செய்து உள்ளார். சமீபத்தில் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.