இன்று மாலை 5.30 மணியளவில் கருவூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கம் சார்பில் மூத்த பொறியாளரும், மதிப்பீட்டாளருமான திரு ராமனாதன் அலுவலகம் சென்று அவருடய உயர்குண நலம் பண்பு பாராட்டி தலைவர் யோகா வையாபுரி நூலாடை அணிவிக்க, புரவலர் ராமசாமி ஐயா சந்தனமாலை அணிவிக்க, செயலர் ஜெயப்பிரகாஷ் எழுச்சிக்கவி பாரதியின் நினைவுப் பரிசும், தியாகு, ரமணன்நூல் பரிசும் வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
அவருடய உயர் பணிச் சிறப்பை மேலை பழநியப்பன் எடுத்துரைத்தார் திரு ராமனாதன் அவர்களின் தந்தையார் முன்நின்று எழுப்பிய கட்டிடங்கள் வாசவி மஹால், தலைமைத் தபால் அலுவலகம் என்ற செய்தி அனைவரும் அறிந்து வியந்தோம். தன் அலுவலகம் ஞாயிறு விடுமுறை என்றால் விடுமுறைதான் என்பதிலும் உறுதியானவர் என்பதையும், தான் எடுத்துக்கொள்ளும் சிறு உணவு முந்திரி பக்கோடா, காரட் அல்வா என்றால் அங்கிருக்கும் அலுவலகப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அது வே என்ற உயர்குணம் அறிந்தோம்.
உணவை ஒதுக்கி பணிக்கு முன்னிடம் தருபவர் என்பதையும் கூட்டங்களில் முதல்நிலையினருக்கு கடைசி வாய்ப்பும் தொழிலில் புதிதாய் வந்துள்ள கடைசிப் பெஞ்சினருக்கு கருத்துக் கூற முதல் வாய்ப்பும் தருபவர் என்பதை அறிந்தோம்
தன்னை நேசித்து காத்து வரும் தன் மகள் மருமகன் பெருமையை நெகிழ்ந்து நினைவுகூர்ந்தார்
இன்சினியர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது.சர்வேஸ்வரய்யா உயர் பணி என்ற பாரத ரத்னா பெற்ற சிறப்பு, திவான் சிறப்புகளையும் நினைவுகூர்ந்தது நெகிழ் வைத்தந்தது
ஒரு குடும்ப விழாவில் கலந்துகொண்ட மகிழ்வொடு பயனாடை, நினைவுப்பரிசுடன் வாயில் வரை வந்து வழியனுப்பிய பண்பாடு சிறப்பானது
மகள் திருமதி சங்கர் நன்றி கூறினார்.
ரெட்கிராஸ், பேனா நண்பர் பேரவை மாவட்ட அமைப்பாளர் திருமூர்த்தி நூல் பரிசு வழங்கி வாழ்த்தினார்