ஆடி மாத பிரதோஷம் கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கம் அன்னதானம்

செவ்வாய், 26 ஜூலை 2022 (21:32 IST)
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத பிரதோஷத்தினை முன்னிட்டு கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கம் சார்பில் அன்னதான நிகழ்ச்சி  நடந்தது.
 
கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத பிரதோஷ வழிபாட்டினை தொடர்ந்து கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதான வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் லயன் ராமசாமி மற்றும் பூபதி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியினை கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கத்தின் செய்தி தொடர்பாளரும், கருவூர் திருக்குறள் பேரவையின் செயலாளருமான மேலை.பழநியப்பன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க செயலாளர் ஜெயப்பிரகாஷ், துணைத்தலைவர் தியாகு,  பொருளாளர் சீனிவாசபுரம் ரமணன் மற்றும் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் ஏராளாமனோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்