கரூர் கோயிலுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றம்: மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை..!

Webdunia
புதன், 21 ஜூன் 2023 (14:07 IST)
கரூர், குளித்தலை அருகே வீரணம்பட்டி காளியம்மன் கோயிலுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
கடந்த 8ம் தேதி பட்டியலின இளைஞரை கோயிலுக்குள் அனுமதிக்காத விவகாரத்தில் கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில் கலெக்டர் தலைமையில் நடந்த பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்பட்டுதை அடுத்து வைக்கப்பட்ட சீலை மாவட்ட ஆட்சியர் அகற்றினார்.
 
ஆனால் அதே நேரத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி சீல் வைக்கப்பட்ட விழுப்புரம் திரெளபதி அம்மன் கோயிலை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
 
இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதால், இவ்விவகாரத்தில் அறநிலையத்துறைதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மனுதாரர் அறநிலையத்துறையை அணுகலாம் என தலைமை நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்துள்ளார்.
 
மேலும்  மனுதாரரின் விண்ணப்பத்தை சட்டப்படி  பரிசீலிக்க அறநிலையத்துறைக்கு உத்தரவிடப்பட்டு வழக்கு முடித்துவைக்கப்பட்டது!
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்