3 காலகட்டங்களில் 3 பார்ட்களாக உருவாகிறதா தனுஷின் கேப்டன் மில்லர்?

சனி, 17 ஜூன் 2023 (15:34 IST)
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் தனது மூன்றாவது படமான கேப்டன் மில்லர் படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.  இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார்.  முக்கியமானக் காட்சிகளை தென்காசி அருகே படக்குழு படமாக்கி வருகிறது.

படத்தில் சிவராஜ் குமார், பிரியங்கா அருள் மோகன், சந்தீப் கிஷன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இந்த படம் டிசம்பர் இறுதியில் கிறிஸ்துமஸ் நாளில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

வரலாற்று புனைவு படமாக உருவாகி வரும் இந்த படம் 1940 கால கட்டங்களில் நடப்பது போல உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் இரண்டு பாகங்களாக 1990 கால கட்டத்தில் நடப்பது போலவும், மூன்றாவது பாகம் தற்காலத்தில் நடப்பது போலவும் உருவாக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்