பிப்ரவரி 26-ல் கருணாநிதி நினைவிடம் திறப்பு..! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்..!

Senthil Velan
புதன், 21 பிப்ரவரி 2024 (14:56 IST)
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தை 26 ஆம் தேதி முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
 
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி, கடந்த 2018 ஆகஸ்ட் 7ம் தேதி காலமானார். இதை எடுத்து கருணாநிதி உடல் மெரினா  கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது.
 
கருணாநிதி அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவிடம் அமைக்கப்படும் என ஸ்டாலின் அறிவித்தார். இது தொடர்பாக முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின் சட்டசபை விதி எண் 110ன் கீழ் மெரினா கடற்கரையில் அண்ணாதுரை நினைவிட வளாகத்தில் கருணாநிதி நினைவிடம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார்.
 
தமிழக அரசு சார்பில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பீட்டில் நவீன விளக்கப்படங்களுடன் இந்த நினைவிடம் அமைக்கப்பட இருக்கிறது. இதன் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடந்து வந்த நிலையில் தற்போது முழுமையாக நிறைவு பெற்றுள்ளது.

ALSO READ: கருப்பண சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா..! திரளான பக்தர்கள் பங்கேற்பு..!

இதனையடுத்து வரும் 26ம் தேதி கருணாநிதி நினைவிடத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்