காணாமல் போன ‘அன்னாபெல்’ பேய் பொம்மை.. அடுத்தடுத்து நடக்கும் துர் சம்பவங்கள்! - பீதியில் உறைந்த மக்கள்!

Prasanth Karthick

ஞாயிறு, 25 மே 2025 (13:02 IST)

கான்ஜூரிங், அன்னாபெல் உள்ளிட்ட படங்களால் புகழ்பெற்ற அன்னாபெல் பேய் பொம்மை அமானுஷ்ய அருங்காட்சியகத்தில் இருந்து மாயமானதாக வெளியாகியுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

அமெரிக்காவில் அமானுஷ்யம், பேய்கள் சார்ந்த விஷயங்களை கையாள்பவர்களாக 1970களில் பிரபலமாக இருந்தவர்கள் வாரன் தம்பதியினர். இவர்கள் கையாண்ட வித்தியாசமான அமானுஷ்ய சம்பவங்களை மையப்படுத்தி ஹாலிவுட்டில் கான்ஜூரிங், அன்னாபெல், நன் உள்ளிட்ட படங்கள் பல வெளியாகி ஹிட்டாகியுள்ளது.

 

அதன்மூலமாக ராகெடி ஆன் என்ற அன்னாபெல் பொம்மையும் பிரபலமாகியது. வாரன் தம்பதியர்கள் கையாண்ட ராகெடி ஆன் பொம்மைக்குள் அன்னாபெல் என்ற சிறுமியின் ஆவி உள்ளதாக நம்பப்படுகிறது. இந்த பொம்மை வாரென் அமானுஷ்ய அருங்காட்சியகத்தில் கண்ணாடி பேழைக்குள் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது, சமீபமாக இந்த பொம்மையை அமெரிக்காவின் பல மாகாணங்களுக்கு காட்சிக்காக கொண்டு சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.

 

அப்படியாக லூசியானா மாகாணத்திற்கு அன்னாபெல் பொம்மை கொண்டு செல்லப்பட்டபோது, அது வைக்கப்பட்ட ரிசார்ட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த துர் சம்பவங்களுக்கு அன்னாபெல்தான் காரணம் என பொதுமக்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் அன்னாபெல் பொம்மை காணாமல் போனதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியான நிலையில் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

 

இந்நிலையில் அன்னபெல் பொம்மை பத்திரமாகதான் இருக்கிறது என்று அமானுஷ்ய ஆய்வாளர் டான் ரிவேரா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆனால் பேய் புகுந்த ஒரு ஆபத்தான பொம்மையை எதற்காக இப்படி மாகாணம் மாகாணமாக தூக்கித் திரிய வேண்டும் என மக்கள் பலர் கொந்தளித்துள்ளனர். இந்த அன்னாபெல் பேய் பொம்மை அடுத்து இலினாய்ஸ் மாகாணத்திற்கு செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்