10 ஆயிரம் கோடியாவது அடிச்சிருப்பார்! – ஐடி ரெய்டு குறித்து கார்த்திகேய சிவசேனாதிபதி!

Webdunia
செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (11:59 IST)
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் ஐடி ரெய்டு நடத்துவதை வரவேற்பதாக கார்த்திகேய சிவசேனாதிபதி தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மீது கடந்த சில நாட்களாக ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட சென்னை, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட அவருக்க சொந்தமான 52 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்த போது பதவியை தவறாக பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர் உட்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

இந்நிலையில் இந்த ரெய்டு குறித்து பேசியுள்ள திமுகவின் கார்த்திகேய சிவசேனாதிபதி “எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவது வரவேற்கத்தக்கது. கொரோனாவை வைத்து அடித்ததே தனிக்கொள்ளை. தனியாக ரூ.10 ஆயிரம் கோடி கொள்ளையடித்திருப்பார்” என பேசியுள்ளார். அவர் இவ்வாறு கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்