24 மாநிலங்களில் இருந்து 72 அமைச்சர்கள்! பாஜக புதிய அமைச்சரவையின் சுவாரஸ்யமான தகவல்கள்!

Prasanth Karthick

திங்கள், 10 ஜூன் 2024 (08:55 IST)
நேற்று மூன்றாவது முறையாக மக்களவை தேர்தலில் வென்ற பாஜக கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தது. இதன்மூலம் தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி தேர்வாகி பதவி பிரமாணம் செய்து கொண்டார்.



அவருடன் அமித்ஷா, குமாராசாமி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலரும் அமைச்சர்களாக பதவி பிரமாணம் செய்துக் கொண்டனர். பிரதமர் மோடியின் 3.0 கேபினேட்டில் 72 அமைச்சர்கள் அங்கம் வகிக்கின்றனர். அதில் 31 பேர் கேபினேட் அமைச்சர்கள், 36 பேர் இணை அமைச்சர்கள் மற்றும் 5 பேருக்கு தனிப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

இதில் 61 அமைச்சர்கள் பாஜகவை சேர்ந்தவர்கள். 11 பேர் பாஜக கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள். இந்த அமைச்சர்கள் பட்டியலில் 7 முன்னாள் முதலமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். மொத்தமுள்ள 72 அமைச்சர்களும் 24 மாநிலங்களை சேர்ந்தவர்கள். அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் இருந்து 9 பேர் அமைச்சர்களாகியுள்ளனர்.

இந்த பட்டியலில் உள்ள 43 அமைச்சர்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக எம்.பியாக தேர்வானவர்கள். இந்த அமைச்சரவையில் 7 பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்