தேர்தல் முடிந்துவிட்டது, இனிமேல் நாட்டின் மீது அக்கறை செலுத்துங்கள்: ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்!

Mahendran

செவ்வாய், 11 ஜூன் 2024 (12:59 IST)
தேர்தல் முடிந்து விட்டது, பதவியேற்பு முடிந்து விட்டது, எனவே இனி நாட்டின் மீது கவனம் செலுத்துங்கள் என மத்திய அரசுக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
 
தேர்தலின் போது ஆளும் கட்சியும் எதிர்கட்சிகளும் தரம் தாழ்ந்த விமர்சனங்களை வைத்தனர், அவை சமூகத்தில் பிளவை அதிகரிக்க செய்யும் வகையில் இருந்தது, இப்போது தேர்தல் முடிந்து விட்டது, இனிமேல் நாட்டின் நலனில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது.
 
மணிப்பூர் ஓர் ஆண்டாக பற்றி எரிகிறது, அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நேரம் இது, பல துறைகளில் நாம் முன்னேறிருக்கலாம், ஆனால் அதற்காக அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விட்டது என்று பொருள் அல்ல’ என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்