காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் இன்று கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர், உக்ரைனிலிருந்து திரும்பும் இந்திய மருத்துவ மாணவர்கள் மீண்டும் அங்கு சென்று படிப்பதற்கான சாத்தியம் இல்லை. ஆனால், அவர்களை இந்தியாவில், தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பில் சேர்த்துக் கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இந்தியாவில் மருத்துவ இடங்கள் குறைவாகவே உள்ளன.
ஒருவேளை அது சாத்தியமில்லை என்றால் சீனாவில் படித்த மாணவர்களைப் போல இந்தியாவுடன் ராஜாங்க ரீதியாக நல்ல உறவை வைத்துள்ள வெளிநாட்டுக்கு அனுப்பிப் படிப்பைத் தொடருவதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இது ஒரு அசாத்தியமான சூழ்நிலைதான். உக்ரைனுக்கு படிக்கச் சென்ற மருத்துவ மாணவர்களின் கல்விக் கடன்களை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஒத்திவைக்க வேண்டும் என தெரிவித்தார்.